அமீர்கானை கொலையாளி என சித்தரித்த பாகிஸ்தான்!

Published:

amirkhan - 2026

கொலை குற்றவாளி எனக் கூறி, நடிகர் அமிர்கானின் புகைப்படத்தை பாகிஸ்தான் டிவி சேனல் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ’17 ஆண்டுகளாக ஒரு கொலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆமிர்கான் பிடிபட்டார்’ என செய்தி வாசிக்கப்பட்டது.

அப்போது குற்றவாளி ஆமிர்கானின் படத்துக்கு பதிலாக இந்தி நடிகர் அமிர்கானின் புகைப்படம் டிவியில் காட்டப்பட்டது. இந்த செய்தியை பார்த்த நேயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் செய்தி சேனலின் பொறுப்பற்ற செயலை கண்டிக்க ஆரம்பித்துவிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட டிவி சேனல் இந்த செய்திக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த தகவல் பாலிவுட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Related articles

Recent articles

spot_img