corono 21
corono 21

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வரிசையில் மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக குஜராத் முந்தியுள்ளது.

புதன்கிழமை ஒரே நாளில் 1,273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இதில் 52% பாதிப்பு, இந்தியாவின் மேற்குதிசை மாநிலங்களான மகாராஷ்டிரமும், குஜராத்துமே கொண்டிருந்தன.

மொத்தம் 39 பேர் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்த நிலையில், இதில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 18 பேரும், குஜராத்தில் 13 பேரும் அடங்குவர்.

கடந்த புதன்கிழமை மட்டும் மகாராஷ்டிரத்தில் 431 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளான நிலையில், குஜராத்தில் 229 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.
5 நாட்களுக்கு முன்பு, கொரோனா பாதிப்பு பட்டியலில் 6வது இடத்தில் இருந்த குஜராத், தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தில்லி மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending