thukku 4
thukku 4

ஆந்திராவில் உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செய்வதறியாது சாலையில் கணவரின் உடலுடன் விடிய விடிய அவரது மனைவி மற்றும் மகன் அழுதபடி காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அருகே உள்ள மோபிதேவி லங்கா கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேஸ்வர ராவ் (42). இவருக்கு நாகலதா என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வரராவின் குடும்பம், பிழைப்பு தேடி கிருஷ்ணா மாவட்டம், பெத்த புலிபாக்கா கிராமத்திற்கு சென்றனர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வெங்கடேஸ்வரராவ் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கடேஸ்வரராவின் உடலை ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தார் நாகலதா. ஆனால், அங்கு உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தற்கொலை செய்து கொண்டவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என உறவினர்கள் திட்ட வட்டமாக கூறிவிட்டனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இதைத் தொடர்ந்து, ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் உடலை சாலையில் இறக்கி வைத்து விட்டு சென்றுவிட்டனர். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவரின் உடலுடன் நாகலதா விடிய விடிய அழுதபடி உட்கார்ந் திருந்தார். உடன் அவரது மகனும் அழுது கொண்டிருந்தார்.

இதுகுறித்து கிராம வருவாய் அலுவலர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் நாகல தாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வெங்கடேஸ்வரராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்று இருக்கும் கிராமத்தில் உடலை அடக்கம் செய்யவிடாமல் கிராமத்தை விட்டு விரட்டிய சம்பவம் மனிதாபிமானத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending