corono 22

கான்பூரில் தமிழகத்தைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அசோக் சுக்லா கூறுகையில்,

வியாழக்கிழமை 50 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களின் தொடர்பு உடையவர்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஹாட்ஸ்பாட் மண்டலத்தில் உள்ள கூலி பஜாரில் தங்கியுள்ளவர்கள். இங்கிருந்து ஏற்கெனவே சுமார் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கான்பூரில் இதுவரை கொரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending