ugc
ugc

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டதோடு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்தது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழம் செப்டம்பரில் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending