miltry

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரேதசம், ஸ்ரீநகரில் நேற்று (மே 18) இரவு போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

ஸ்ரீநகரின் நவகாடல் பகுதியில் நெருக்கடியான சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நள்ளிரவில் அவ்வீடுகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறினர். என்கவுன்டர் காரணமாக ஸ்ரீநகரில் மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் மற்றும் போலீசாரிடையே சமீபத்தில் நடைபெற்ற முதல் தாக்குதல் இதுவாகும். ஸ்ரீநகரின் கனேமசார் நவகாடல் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியதாக காவல் துறை செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending