accident - 2026

மகாராஷ்டிரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மே 31ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் திரும்புகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம், சோலாபூரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பேருந்து ஒன்றில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்களுடைய பேருந்து இன்று காலை யவாட்மால் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் 4 புலம்பெயர்ந்த தொழிலாளர் உயிரிழந்தார்கள். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ALSO READ:  மோடியிசம் : இப்போதைய காலகட்டம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending