குடியரசுத் தலைவராக அத்வானி: ஆதரவுக் குரல் எழுப்பினார் சத்ருகன் சின்ஹா

இந்தியா சற்றுமுன்

shatrughan-sinha

புதுதில்லி:
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதற்கான முழுத் தகுதியும் பெற்றுள்ளவர் அத்வானி மட்டுமே என பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவரை அமர்த்துவதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் வரும் அந்தப் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளர் அத்வானிதான் என பாஜக எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சத்ருகன் சின்ஹா தன் ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜக.,வின் முக்கியத் தலைவரான அத்வானியே குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர். அப் பதவிக்கான தகுதி, அனுபவம், திறமை, மரியாதை, என அத்தனையும் நிறைந்த பொருத்தமான தலைவர் அத்வானி. இவரே குடியரசுத் தலைவர் ஆக வேண்டுமென நான் விரும்புகிறேன். பெரும்பாலானோரின் மன எண்ணத்தையே என் கருத்தாக நான் பதிவு செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.