பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து?

Published:

Sasikalain prison - 2026

பெங்களூர்:
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில், சிறைக் கைதிகளிடம் அவர்களை மிரட்டி அதிகாரிகள் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், இது விவகாரத்தில் சிறைத்துறை வெளியுலகுக்கு கைதிகள் மூலம் என்ன சொல்ல விழைகிறது என்றெல்லாம் இப்போதே விவாதம் கிளம்பிவிட்டது.

இதனிடையே, சசிகலா பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வெளியான அறையின் புகைப்படங்கள் பொய்யானது என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை போல் சிறை உள்ளது என்று கூறுவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் ரூபா, பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் கூறுகிறார் புகழேந்தி.

Related articles

Recent articles

spot_img