இந்தியாவை தாக்க பாகிஸ்தானுடன் கைகோத்துள்ளது சீனா: முலாயம்

Published:

China ready to attack India in collaboration with Pakistan - 2026

பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை தாக்க சீன தயாராகி வருகிறது பாராளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக இந்தக் கூட்டத் தொடர் நடக்கிறது. இன்று இந்தியா-சீனா பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான முலாயம் சிங் யாதவ் பேசுகையில், சீனா சிக்கிம் எல்லை பிரச்னையால் அதிக கோபத்தில் உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவை தாக்க சீனா தயாராகி வருகிறது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சீனா அதிகமான ஆயுதங்களைப் புதைத்து வைத்துள்ளது. நான் பல ஆண்டுகளாக மத்திய அரசை எச்சரிக்கை விடுத்து வருகிறேன். அவர்கள் யாரும் போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தியாவை அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியப் புலனாய்வு அமைப்பு மூலம் நன்கு தெரிந்து கொண்டு இந்தியா அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Related articles

Recent articles

spot_img