கணவன் செலவுக்கு பணம் தரவில்லை! மகனையும் மாமியாரையும் கட்டி வைத்து அடித்த மனைவி!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0818_125611

ஒடிஷா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த சத்ரதார் என்ற நபர் ரோஜலின் நாயக் என்கிற தனது மனைவி, மகன் மற்றும் மாமியார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும். இதனால் மனைவி தினமும் தனது மகனை கயிற்றால் கட்டி வைத்து அடித்து கொடுமை படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது மாமியாரையும் கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதை கையும் களவுமாக பிடிக்க ரகசிய கேமரா ஒன்றை கணவர் வீட்டில் மாட்டினார்.

அதில் மனைவி மாமியாரையும், மகனையும் கொடுமைப்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு இதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனை அடுத்து போலீசார் மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில், தனது கணவன் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். மேலும் தன்னை சரியாக பார்த்து கொள்ளவில்லை. அதனால் தான் இப்படி செய்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.