திருட்டு போன செல்போன்! ஒரு வீட்டையே எரித்த கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0818_123336

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த குமாரி என்பவர் மயிலாப்பூரில் உள்ள சண்முகம் பிள்ளை தெருவில் இருக்கும் அவர் தங்கை வீட்டில் வசித்து வருகிறார். அங்குள்ள கோயிலில் கடந்த 15ஆம் தேதி ஆடி திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது கோயில் தர்மகர்த்தாவின் செல்போன் தொலைந்து போனதாக தெரிகிறது. அந்த செல்போனை குமாரியின் தங்கை மகன் எடுத்ததாக கூறி தர்மகர்த்தா சிவக்குமாரின் உறவினர்கள் கடுமையாக அடித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரில் காவல்துறையினர் இரண்டு தரப்பையும் சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.

இதனால் குமாரியின் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் சிவக்குமாரின் உறவினர்கள், குமாரியின் தங்கை வீட்டை தீ வைத்து எரித்தனர். இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

இதனையடுத்து காவல்துறையினர், சிவக்குமாரின் உறவினர்கள் அய்யனார், அரவிந்தன், சாந்தி, தமிழரசன், வினோத், கோபி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவக்குமாரை தேடி வருகின்றனர்

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.