
தனுசு ராசி
காலபுருஷ தத்துவத்தின்படி 9வது ராசி தனுசு ராசி. இந்த ராசியினர் இதுநாள் வரையும் பல சங்கடங்களும் பிரச்சனைகளும் சந்தித்து வந்துள்ளனர். இந்த ராசி அன்பர்களுக்கு இந்த 2020 நல்ல ஒரு விடிவு காலமாக அமையப் போகிறது.
கடந்த ஒரு வருடமாக விரய ஸ்தானத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது ராசியில் அமர்ந்து ஆட்சியாக உள்ளார். ராசியில் இருக்கின்ற சனி கேதுவின் பிரச்சினைகள் தற்போது குருவின் வரவால் சற்று சாந்தமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏழாமிடமான களஸ்திர ஸ்தானத்தில் ராகு பகவான் கடந்த ஒரு வருடமாக பல பிரச்சினைகள் தந்திருப்பார் அதுவும் இப்போது குருவின் பார்வையால் சுபத்துவம் ஆக மாறுகிறது.
சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் சனியானவர் ராசியிலிருந்து இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக போகிறார். அப்போது ஜென்ம சனி பாதச் சனியாக மாறப்போகிறது. ராசியை பொறுத்தவரை இரண்டாமிடத்தில் இரண்டாம் அதிபதி ஆட்சியாக இருப்பதால் தன குடும்ப வாக்கு ஸ்தானம் நல்ல நிலையில் உள்ளது என்று சொல்லலாம்
இதனால் வீட்டுக்குத் தேவையான பொருளாதார வசதிகளை பெருக்குவதற்கும் நல்ல முன்னேற்றம் அடைவதற்கு மனரீதியாக அமைதியும் சந்தோஷமும் ஏற்படுவதற்கும் நல்ல வாய்ப்பு உண்டு என்று சொல்லலாம். குரு தனது ஐந்தாம் பார்வையாக ராசியின் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற கூடிய வாய்ப்பு உண்டு. பெற்றோர்களுக்கு பிள்ளைகளால் அனுகூலம் உண்டு.
இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க கூடிய யோகம் இந்த ஆண்டு நிச்சயம் கிடைக்கும். குரு தனது நேர் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை ஏற்படும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வர யோகம் உண்டு.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த 2020 ஆம் ஆண்டு நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கக் கூடும். குரு தனது 9ம் பார்வையாக ராசிக்கு ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தை வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டுதல், மகிழ்ச்சி போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கக்கூடும்.
சனியின் பார்வை ராசிக்கு 4ஆம் இடத்தில் விழுவதால் சிலருக்கு தாய்வழி சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் சொந்த வீடு வாங்குவதிலும், நிலம் வாங்குவதிலும், வண்டி வாகனங்களை வாங்குவதிலும் சில குழப்பங்கள் ஏற்படலாம். தனது நேர் பார்வையால் எட்டாம் இடத்தை பார்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.
சிலருக்கு வராத கடன் வந்துசேரும், அதுபோல கடன் கேட்டுச் சென்றால் உடனே கிடைக்கும். பத்தாம் பார்வையாக 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சில விரயங்களும் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் போகக் கூடிய நிலை ஏற்படலாம் அதனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் லாபம் சற்று குறைந்தே காணப்படும்.
ஆண்டு இறுதியில் வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கு நல்ல யோகத்தை தரப்போகிறது. ராகு ஆறாம் இடத்திலும், கேது 12ஆம் இடத்திலும் மறைந்து சுபபலன்கள் கொடுக்க உள்ளார்கள். அதுபோல இந்த ஆண்டு இறுதியில் ராசிநாதனான குருபகவான் இரண்டாம் இடமான மகர ராசியில் நீச்ச பங்க ராஜயோகம் அடைந்து நல்ல யோகத்தை கொடுக்க இருக்கிறார். ஆகவே வரக்கூடிய குரு பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி இந்த தனு ராசிக்கு நல்ல யோகத்தை கொடுத்தே தீரும்.
எல்லா கிரக நிலைகளையும் வைத்து பார்க்கும்போது 2020 ஆம் ஆண்டு சுமார் 95 முதல் 100 சதம் வரை நல்ல யோகம் கொடுக்கக்கூடிய ஆண்டாகவே அமையப் போகும்.
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Dhanusu rasikki indha aandu Ena kuzhandhai pirakkum