December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

2020 ஆண்டு பலன்: மகரம்

rasi makaram - 2025

மகர ராசி :
காலபுருஷ தத்துவத்தின்படி 10வது ராசி மகர ராசி. இந்த ராசிக்கு குரு பகவான் விரய ஸ்தானமான 12-ஆம் இடத்தில் ஆட்சியாக உள்ளார். இதனால் இவர்களுக்கு இந்த ஆண்டு பெரும்பாலும் அதிக செலவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு, சுப செலவுகளாக கூட அமையலாம்.

இந்த ராசிக்கு கண்டக சனியாக அமைந்துள்ள சனிபகவான் வரக்கூடிய ஜனவரி மாதம் இறுதியில் ஜென்ம சனியாக மாற உள்ளார். மற்ற ராசியை போலல்லாமல், சனி தனது சொந்த வீடுகளான மகரம் கும்பம் ராசிகளுக்கு பெரிய பாதிப்புகளை தரமாட்டார். இருந்தாலும் ஜென்ம சனி ஒரு சில பிரச்னைகளை தலை காட்டக் கூடிய ஆண்டாகவே இந்த 2020 இருக்கும்.

குரு தனது ஐந்தாம் பார்வையாக ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், இந்த ராசியில் இருப்பவர்களுக்கு தாயார் வழி சொந்தங்களுடன் நல்ல சுமுகமான நிலை ஏற்படும். பலருக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகமும், சொந்த நிலம் வாங்க கூடிய யோகமும், ஒரு சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையக்கூடும்.

குரு தனது நேர் பார்வையாக ராசியின் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சனைகளும் மன ரீதியான பிரச்சனைகளும் குறையக் கூடிய வாய்ப்பு உண்டு. பலருக்கு எதிரிகள் மூலமாக வரும் தொல்லைகள் குறைய கூட வாய்ப்புண்டு.

குரு தனது 9-ம் பார்வையால் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்க கூடும். வராத கடன் வந்துசேரும். அது போல இவர்கள் கடன் கேட்டுச் சென்றால் கடனும் கிடைக்கும்.

சனியே இரண்டாம் இடத்திற்கும் அதிபதி என்பதால் இவர்களுக்கு குடும்பத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் இந்த 2020 ஆம் ஆண்டு அமைத்துத் தரும். சனியின் மூன்றாம் பார்வையாக ராசிக்கு மூன்றாம் இடத்தில் விழுவதால், சிலர் மந்த நிலையாக இருக்கக் கூடிய அமைப்பு உண்டு.

முயற்சி எடுக்காமல் விடக்கூடிய அமைப்புகளும் உண்டு. ஒரு சிலர் எடுத்த பொறுப்பை சரிவர செய்யாமல் பாதியில் விட்டு விடக்கூடிய நிலையும் உண்டு.

தனது நேர் பார்வையாக ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணத்தடை ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதில் சில குழப்பங்களும் ஏற்படும். அதுபோல சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஒரு சில பிரச்சினைகள் வரக்கூடும். தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காமல் போவதற்கு வாய்ப்பு உண்டு.

பத்தாவது பார்வை ராசிக்கு பத்தாமிடத்தில் விழுவதால் தொழில் ஸ்தானம் நல்ல நிலையில் உள்ளது என்று சொல்லலாம். இதற்கு காரணம், சனி தனது பத்தாம் வீட்டில் உச்சம் பெறுகிறார் அதனால் தன் சொந்த வீடுகளான மகரம் கும்ப ராசிக்கு யோகமாகவே மாறிவிடும்.

அதனடிப்படையில் உத்தியோகத்தில் உயர்வும் சிலருக்கு வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பும் அமையக்கூடும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஆண்டாகவே 2020 அமையும்.

செவ்வாய் காரகத்துவம் மற்றும் குருவின் பார்வையால் பங்குசந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். அதுபோல சொந்த வீடுகளை அல்லது சொந்த நிலத்தை விற்று லாபம் பார்க்கக்கூடிய ஆண்டாகவே அமையும் தொழில் செய்பவர்களுக்கும் இடைத்தரகர்களும் இந்த 2020 நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாகவே அமையும்
எல்லா கிரகங்களின் அமைப்புகளை வைத்து பார்க்கும்போது மகர ராசிக்கு சுமார் 85 முதல் 90 சதம் வரை நல்ல யோகம் தரக்கூடிய ஆண்டாகவே 2020 இருக்கக்கூடும்.

இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories