
கும்ப ராசி:
காலபுருஷ தத்துவத்தின்படி 11வது ராசி கும்ப ராசி. இந்த ராசிக்கு இதுநாள் வரையும் தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் இருந்து வந்த குரு பகவான் இப்போது 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சி ஆக உள்ளார் இதுவே இவர்களுக்கு ஒரு நல்ல யோகம் என்று சொல்லலாம். எதிர்பார்த்த லாபம் கிடைக்க இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.
ஜனவரி மாதம் இறுதியில் வரக்கூடிய சனி பெயர்ச்சி, கும்ப ராசிக்கு ஏழரைச் சனியாக அமையப்போகிறது. இது இவர்களுக்கு கண்டகச் சனி என்று சொல்வார்கள். ஆனால் சனி தனது சொந்த வீடுகளான மகரம் கும்பம் ராசிகளுக்கு பெரிய பிரச்சினைகள் கொடுக்காது.
வருகிற சனி பெயர்ச்சியில், லாப ஸ்தானத்தில் இருந்த ராசிநாதனான சனி பகவான், விரய ஸ்தானத்தில் அமையப் போகிறார். அதனால் குரு பகவான் கொடுக்கக்கூடிய லாபம் எல்லாமே சனிபகவான் மூலமாக விரயமாக மாறப்போகிறது என்று சொல்லலாம். சிலருக்கு சுப விரயங்கள் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உண்டு.
குரு தனது ஐந்தாம் பார்வையாக ராசிக்கு மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் இந்த ராசியில் உள்ளவர்கள் நல்ல முயற்சி எடுத்து வெற்றி அடையக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது.
இளைய சகோதர சகோதரிகள் மூலமாக நல்ல ஆதாயம் கிடைக்கக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. ராசிக்கு 5-ஆம் இடத்தை குரு தனது நேர் பார்வையாக பார்ப்பதால், இதுநாள்வரை ஐந்தாமிடத்தில் அமையப்பெற்ற ராகுவால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறைந்து, சுபபலன்கள் தர துவங்கப் போகிறது.
பிள்ளைகள் நன்றாக படித்து வெற்றி அடையக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. குழந்தை பாக்கியத்திற்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க கூடியவர்களுக்கு நல்ல குழந்தை கிடைக்க கூடிய யோகம் இந்த ஆண்டு நிச்சயம் உண்டு என்று சொல்லலாம்.
குரு தனது 9ம் பார்வையாக ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கக் கூடிய யோகம் இந்த ஆண்டு நிச்சயம் உண்டு. அதுபோல சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இந்த 2020 அதிக லாபம் தரக்கூடிய ஆண்டாகவும் வர்த்தகத்தை விரிவு படுத்த கூடிய ஆண்டாகவும் அமையக்கூடும்.
சனியின் மூன்றாம் பார்வை ராசியில் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால், குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோல சனி தனது நேர் பார்வையால் ராசிக்கு 6ம் இடத்தை பார்ப்பதால் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் சந்திக்க கூடிய அமைப்பும் உண்டு.
சனி தனது பத்தாம் பார்வையாக ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்க கூடிய யோகம் இருக்கும் என்று சொல்லலாம்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கக்கூடிய ராகு கேது பெயர்ச்சியும், ராகு 4ம் இடத்திலும் கேது பத்தாம் இடத்திலும் பெயர்ச்சியாக போகிறார்கள். ராகுவின் பெயர்ச்சி தாயார் மற்றும் தாயார் சொந்தங்களுடன் சில பிரச்சினைகள் ஏற்பட கூடிய சூழ்நிலை வரக்கூடும்.
பத்தாமிடத்தில் கேது பெயர்ச்சி நல்ல யோகம் தரும் என்று சொல்லலாம். வேலையில் நல்ல முன்னேற்றமும் எதிர்பாராத பண வரவும் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில்லாமல் கஷ்டப்பட கூடியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய ஆண்டாகவே 2020 அமையக்கூடும்.
அதுபோல ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் குருவானவர் லாப ஸ்தானத்தில் இருந்து விரய ஸ்தானத்திற்கு சென்று நீசபங்க யோகம் அடைய இருக்கிறார் அந்த தருணத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக செலவு ஏற்படக்கூடும். சிலருக்கு சுப செலவுகள் அதிகமாக ஏற்படக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.
இப்படி எல்லா வித கிரக அமைப்புகளை வைத்து பார்க்கும்போது கும்ப ராசி ராசிக்கு சுமார் 80 லிருந்து 85 சதம் வரை நல்ல யோகம் தரக்கூடிய ஆண்டாகவே 2020 அமையும்
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : [email protected]