
மீன ராசி:
காலபுருஷ தத்துவத்தின்படி 12வது மற்றும் கடைசி ராசிதான் மீனராசி. இந்த ராசிக்கு இதுநாள்வரையில் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த குருபகவான் இப்போது கர்ம ஸ்தானமான பத்தாமிடத்தில் ஆட்சியாக இருக்கிறார்.
இதனால் இதுநாள்வரை சனி கேது போன்ற கிரகங்கள் பத்தாமிடத்தில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த மீன ராசியினர், தான் வேலை செய்து வரும் இடத்தில் பல விதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். அதுபோல இந்த ராசியில் பலருக்கு வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள்.
இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக இந்த நிலை மாறி இவர்களுக்கு வேலையில் நல்ல ஒரு உன்னதமான நிலை ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது போல வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய ஒரு யோகமும் உண்டு.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் நடக்க இருக்கக்கூடிய சனி பெயர்ச்சியில் பத்தாமிடத்தில் இருந்து சனி பகவான் 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் ஆட்சியாக போகிறார். அந்தக் காலகட்டத்தில் இந்த மீன ராசியை பொறுத்தவரை தொழில் மூலமாக நல்ல லாபம் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாகவே அமையப் போகிறது. சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும், அதன்மூலம் நல்ல லாபமும் கிடைக்கும்.
குரு தனது ஐந்தாம் பார்வையாக ராசியின் இரண்டாம் இடத்தை பார்ப்பதால், குடும்பத்தில் நல்ல அமைதியும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் அமையக்கூடும். பேச்சாற்றல் மிக்க உடையவர்கள் அல்லது பேச்சை மூலதனமாக கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல யோகம் தரும் என்று சொல்லலாம்.
குரு நேர் பார்வையாக ராசியின் நான்காம் இடத்தைப் பார்ப்பதால், நான்காமிடம் சுபத்துவம் ஆக மாறுகிறது. நான்காம் இடத்தில் அமையப் பெற்ற ராகுவால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் குறைந்து சுகம் கிடைக்க கூடிய ஆண்டாகவே அமையும்.
பலருக்கு சொந்த வீடு வாங்க கூடிய யோகமும், சொந்த நிலம் வாங்க கூடிய யோகமும், ஒரு சிலருக்கு சொந்த வண்டி வாங்க கூடிய யோகமும் இந்த ஆண்டு அமையக்கூடும். தாயார் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதுபோல தாயார் மற்றும் தாயார்வழி சொந்தங்களுடன் அன்பு பாராட்டக் கூடிய ஆண்டாகவே அமையக்கூடும். குருவின் 9-ஆம் பார்வையால் 6-ஆம் இடம் சுபத்துவம் ஆக மாறுகிறது. கடன் பிரச்சினைகள் தீரும். மன ரீதியான பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு.
சனியின் 3 ஆம் பார்வையால் சற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது அதனால் உடல் ரீதியாக சில பிரச்சனைகள் சந்திக்க கூடிய அமைப்பு ஏற்படும். சனியின் பார்வையால் ராசியின் ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டுள்ளது அதனால் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்காது. மாணவர்கள் படிப்பில் மந்தநிலை காட்டுவார்கள்.
நல்ல முயற்சி எடுத்து அக்கறையுடன் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். சில தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பூர்வ புண்ணியஸ்தானம் புத்திரஸ்தானம் சற்று பாதிப்பு ஏற்பட்டதால் சிலருக்கு பிள்ளைகளால் சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சனியின் பார்வை ராசிக்கு எட்டாமிடத்தில் விழுவதால் சிலருக்கு கடன் தொல்லை மனரீதியான சில பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு மூன்றாம் இடத்தில் மறைவதால் இவர்களுக்கு நல்ல யோகமாக மாறும் வாய்ப்பு உண்டு. ஆனால் கேது 9-ஆம் இடத்தில் பெயர்ச்சி, தந்தை வழி சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அது போல ஆண்டு இறுதியில் தந்தையின் உடல்நிலை சற்று பிரச்சினை சந்திக்கக் கூடிய நிலையில் அமையும் அதனால் ஆண்டு இறுதியில் தந்தையார் உடல்நிலையில் சற்று கவனம் தேவை.
அதுபோல ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சி இவர்களுக்கு நல்ல யோகத்தை தரும் குரு பத்தாமிடத்தில் இருந்து 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி நீச்சபங்க ராஜயோகம் அடைகிறார்.
அந்த காலகட்டத்தில் இவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
இப்படி எல்லா கிரக நிலைகளை வைத்து பார்க்கும்போது மீன ராசியை பொறுத்தவரை இந்த 2020 ஆம் ஆண்டில் சுமார் 90 95 சதம் வரை நல்ல யோகம் தரக்கூடிய ஆண்டாகவே அமையும்
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : [email protected]