
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : [email protected]
பொது பலன்கள்
எண்ணியது இனிதாய் நடக்கப் போகும் 2020ம் புத்தாண்டு:
எல்லோருக்கும் 2020 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா வித நன்மைகளும் கிடைக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்தித்து கொள்கிறேன்.
இந்த ஆண்டின் கிரகநிலை பொறுத்தவரை குரு ஒன்பதாம் வீடான தனுர் ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.
சனியானவர் இந்த வருடம் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதுபோல இந்த வருட இறுதியில் ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளார்.
அதுபோல குரு பகவானும் இந்த ஆண்டு இறுதியில் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகி அங்கே நீச்சம் அடைவார். அங்கே சனி பகவான் ஆட்சியாக இருப்பதால் இந்த ஆண்டு குருபகவான் மகரத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார். ஆகவே இந்த ஆண்டு குரு பகவானின் மகர ராசி பெயர்ச்சி நீச்சபங்க யோகமாக மாறி விடும்.
இப்படிப்பட்ட நிலையில் ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் விருச்சிக ராசியில் ஆட்சி ஆகவும், ஆண்டு இறுதியில் மேஷ ராசியில் ஆட்சியாகும் இருக்கப் போகிறார்.
இந்தப் பெயர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ராசியும் எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை நாம் காண இருக்கிறோம்.