2020 ஆண்டு பலன்: விருச்சிகம்

rasi viruchikam - 2026

விருச்சிக ராசி:
காலபுருஷ தத்துவத்தின்படி 8 வது ராசி விருச்சிக ராசி. இந்த ராசிக்கு குரு 2-ஆம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஆட்சியாக உள்ளது நல்ல சிறப்பு தரும் என்று சொல்லலாம். அது போல வரப்போகிற சனிப்பெயர்ச்சி, ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடக்க இருக்கிற சனி பெயர்ச்சி விருச்சிக ராசியைப் பொறுத்தவரை நல்ல யோகம் கொடுக்கக்கூடிய ஒரு பெயர்ச்சி ஆகவே இருக்கப்போகிறது.

இதற்கு முக்கிய காரணம் இதுவரை இருந்த ஏழரைசனி முழுவதுமாக விலகி இவர்களுக்கு நல்ல நன்மைiயைக் கொடுக்கக் கூடிய ஆண்டாக இந்த 2020 அமையப்போகிறது. மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானம், தைரிய வீரிய ஸ்தானத்தில் மறைந்து ஆட்சியாக போகிறார். ராசியை பொறுத்தவரை இனி வரக்கூடிய 2020 இல் இருந்து நல்ல காலம் என்றே சொல்லலாம்.

குரு தனது ஐந்தாம் பார்வையாக ராசிக்கு 6ம் இடத்தை பார்ப்பதால் உடல் ரீதியான பிரச்சினைகள் எல்லாம் சரியாகி நல்ல ஆரோக்கியம் கிடைக்கக்கூடிய ஆண்டாக அமையப் போகிறது. அதுபோல தனது பார்வையால் ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பதால் அங்கேயுள்ள ராகு சுபத்துவம் அடையப் போகிறார்.

அதுமட்டுமில்லாமல் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். வராத கடன் வந்து சேர வாய்ப்பு உண்டு. இவர்கள் கடன் கேட்டுச் சென்றால் கடன் கிடைக்க வாய்ப்புண்டு. குரு பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் தொழில் ஸ்தானம் நல்ல நிலையாக உள்ளது.

வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு, அதன்மூலமாக நல்ல பொருளாதார வசதிகள் வரக்கூடிய வாய்ப்புகள் இந்த ஆண்டு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடிய யோகம் உண்டு.

சனியின் பார்வை ராசியில் ஐந்தாம் இடத்தில் விழுவதால் மாணவர்கள் படிப்பில் மந்தநிலை காட்டுவார்கள். இந்த ராசியில் பிறந்த மாணவர்களுக்கு உடல் ரீதியாக சில பிரச்சனைகள் வரக்கூடும். தனது நேர் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தையாருக்கு உடல் ரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. ராசிக்கு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

இறுதியில் நடக்கக்கூடிய குரு பெயர்ச்சி சாதகமாக இல்லை. ஏனென்றால் குரு மூன்றாம் இடமான மறைவு ஸ்தானத்தில் சென்று நீச்சபங்கம் பெறப் போகிறார். அதுபோல ராகு கேது பெயர்ச்சி நல்ல யோகம் கொடுக்காது.

ராகு 7 ஆம் இடத்திலும், கேது ராசியிலும் பெயர்ச்சி ஆகி, உடல் ஆரோகியத்தை கெடுப்பார்கள். அந்த காலகட்டத்தில், உடல் ரீதியான பிரச்சனைகள், கணவன் மனைவியிடையே சில பிரச்சினைகள், தொழிலில் சில பிரச்சினைகள், இப்படிப்பட்ட கஷ்டமான காலகட்டம் அமையக்கூடும்.

எல்லா கிரக அமைப்புகளை வைத்து பார்க்கும்போது, விருச்சிக ராசிக்கு இந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 85 முதல் 90 சதம் வரை நல்ல யோகம் கொடுக்கக்கூடிய ஆண்டாகவே அமையும்.
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!

கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.

ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.

ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories