Dhinasari Home page

அறிவியல் ஆசிரியர்கள் கவனிக்க…

சற்றுமுன்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களில் சிறந்த திறமை வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது தமிழககல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது. 
இவ்விருதுக்கு தேர்வாகும், 10 ஆசிரியருக்கு தலா ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்கள், விருதுக்கான விண்ணப்பங்கள், www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் மார்ச் 7-ந்தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.