காவலுக்கு இருந்த நாயை கொன்று மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு!

கிரைம் நியூஸ் தமிழகம்
robbery

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்திமுனையில் மிரட்டி நகை, பணத்தை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

செண்பகராயநல்லூர் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி கல்யாணி (85). மகன்கள் வெளியூரில் இருந்து வரும் நிலையில், கூரை வீடு ஒன்றில் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே சென்ற இரு மர்ம நபர்கள் கல்யாணியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர்.

வீட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், 6 பவுன் நகை உள்ளிட்டவைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற கரியாப்பட்டினம் காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வீட்டுக் காவலுக்கு இருந்த நாயை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றது தெரிய வந்தது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.