leeja-kerala

ஜோஸ் – ஸ்ரேலி தம்பதி கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு லீஜா ஜோஸ் என்ற மகள் இருந்தார். இவர் கடந்த 4 வருடங்களாக தென் கொரியாவில் ஆராய்ச்சி படிப்பை (P.hd) மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் விடுமுறை காரணமாக கேரளாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் திரும்பிய நிலையில், கொரோனா காரணமாக மீண்டும் தென்கொரியாவுக்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மீண்டும் தென்கொரியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதில் காது வலி மற்றும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு இதற்கான சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

leeja

இதனையடுத்து தனிமைப்படுத்துதல் முடிந்தவுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் சொந்த ஊருக்கு மீண்டும் சென்றுவிடலாம் என எண்ணி சம்பவ தினத்தன்று விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனே அங்கிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இதனையடுத்து மகளின் மரணம் செய்தியை கேட்டு கதறி துடித்த அவரது பெற்றோர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமபவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending