பவன் கல்யாண் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பி வரும் வழியில்…. சோகம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
bhavan-birthday-party
bhavan-birthday-party

வாரங்கல் ரூரல் மாவட்டத்தில் கோரமான சாலை விபத்து நேர்ந்தது. லாரியும் காரும் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

புதன்கிழமை விடியற்காலையில் தாமெர மண்டலம் பசரகொண்டா கிராஸ் ரோட்டில் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் எதிரில் வந்த காரை மோதினார். அதனால் கார் நசுங்கித் தூளாகியது.

காரில் இருந்த மேகல பிரவீன், மேகல ராஜேஷ், மேடி பவன், ரோஹித், ரஹீம் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திரைப்பட ஹீரோ பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பார்ட்டியில் பங்கு கொண்டு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நேர்ந்தது.

செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 22 லிருந்து 26 வயதுக்குள் இருப்பவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.