கமலின் பிரிவினைவாத அரசியல்; ரஜினியை சீண்ட இதுதானா கிடைத்தது?!

Published:

rajini kamal - 2026

கமல்ஹாசன் இப்போது ரஜினியை சீண்டும் வகையில் கன்னட மொழியைச் சொல்லி, வம்புக்கு இழுத்துள்ளார். அவரது டிவீட் இப்போது ரஜினி ரசிகர்களால் அலசி ஆராயப் படுகிறது.

ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு கமல்ஹாசன் போட்ட ட்வீட்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ரஜினியை சீண்டிப் பார்க்க இந்தப் பிரிவினை அரசியல்தானா கமலுக்குக் கிடைத்தது என்று பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம் குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது, ‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?’ என்று பதிவிட்டிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த ட்விட்டர் பதிவை ஆங்கிலத்தில் இட்டிருந்தார் கமல். அதில் அவர் ‘நாகேஷ் என் குருமார்களில் ஒருவர். ராஜ்குமார், ராஜ்குமார் அண்ணா, சரோஜாதேவி ஆகியோர் என் நண்பர்கள். ரஜினிகாந்த் மற்றும் அம்பரீஷ் எனக்கு உரியவர்கள். துணைவேந்தர் விஷயத்தில் இப்படி மத்திய மாநில அரசுகள் ஒன்றைக் கேட்டால் இன்னொன்றைத் தருவது நகைப்புக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தேவை.’ என்று இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

 

கன்னடர்கள் இவர்கள் என்று கமல் குறிப்பிட்ட பட்டியலில், ரஜினி காந்த் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கமலுக்கு ஏன் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

மற்றவர்கள் செய்யும் அரசியல் வேறு, ஆனால் கமலும் அதே அரசியலில் அங்கமாகிவிட்டார் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கல். இதற்கு பதில் அளித்துள்ள  கமல் ரசிகர்கள், கமல் நேர்மறையாகச் சொன்னாலும் எதிர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் போக்கு கண்டனத்துக்குரியது என்று பதில் பதிவிட்டிருக்கின்றனர்.

உண்மையில் கமல் நேர்மறையாகச் சொன்னாரா, அல்லது எதிர்மறையாகச் சொன்னாரா என்பது அவருக்கே தெரியும். தமிழில் பதிவிட்டாலே அதற்கு விளக்கவுரைகள் தேவைப்படும் நிலையில்,  ஆங்கிலத்தில் வெளியான கமலின் இந்த ட்வீட் சர்ச்சைக்குள்ளானதால் இதன் தமிழ் மொழியாக்கத்தையும் அதற்கான விளக்கவுரையையும் கமலே விரைவில்  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம்!

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img