பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்: ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar - 2026

மகாவிஷ்ணு மோட்சம் என்னும் பூரண சுதந்திர நிலையில் இருந்தார் ஒரு சமயம் உலகத்திலேயே மிகவும் கனமான பொருள் அல்லது உயர்ந்த பொருள் என்ன என்று தெரிந்து கொள்ள அவர் விரும்பினார்.

அவர் ஒரு தராசை கொண்டு வந்து நான்கு நிலையில் இருந்த பூரண சுதந்திர நிலையினை தராசின் ஒரு தட்டில் வைத்தார். மற்றொரு தட்டில் தாம் படைத்த பல்வேறு பொருட்களை ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டே இருந்தார் சுவர்க்கம் மற்ற உலோகங்கள் செல்வங்கள் மற்றும் எண்ணற்ற பொருட்களை அடுக்கிக் கொண்டே போனார். எவ்வளவு பொருட்களை வைத்தாலும் பூரண சுதந்திரத்தை வைத்திருந்த தட்டுத கீழே இருந்தது. அதில் மேலே செல்வதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை.

என்ன இந்த பூரண சுதந்திர நிலைக்குச் சமமான பொருள் எதுவுமே இல்லையா? என்று எண்ணி வியந்தார் மகாவிஷ்ணு. கடைசியில் பிறர் நலம் எனும் நற்குணத்தை தட்டில் வைத்தார். மேலே இருந்த தட்டு கீழே இருந்த தட்டு மேலே செல்லத் தொடங்கியது. இதிலிருந்து பிறர் நலம் பேணல் எனும் நற்குணமே மிகக் கனத்த அல்லது மிக உயர்ந்த பொருள் என்று பகவான் தீர்மானித்தார்.

பிறகு பகவான் நான் என்ன செய்யவேண்டும் என ஆலோசித்தார். அவதாரங்கள் பல எடுத்து மக்களுக்கு நல்லது செய்யப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டார்.

முதலில் மீனாக அவதரித்த பகவான் காலம் செல்லச் செல்ல மனித உடலிலேயே தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் மீன் வடிவத்தில் அவதாரம் செய்தபோது வேதங்களை உயிர்ப்பித்தார். இருந்தாலும் மக்கள் உள்ளங்களிலே நம்மால் இப்படி மீன் வடிவத்தை எடுத்துக் கொள்ள முடியுமா? வேதங்களைக் காப்பாற்ற முடியுமா? முடியாதா? இப்படி இருக்கையில் இந்த அவதாரத்தை நாம் ஒரு முன் மாதிரியாக வைத்துக்கொண்டு எப்படி அவற்றை கடைப்பிடிக்க முடியும் என்று தோன்ற வாய்ப்பு உள்ளது.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.07 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பிறகு பகவான் ஆமையாக அவதாரம் எடுத்து பெரிய மலையைத் தாங்கினார். இதிலும் மக்கள் ஆமையாக அவதாரம் எடுத்து மலையை தூக்க நமக்கு சாமர்த்தியம் கிடையாது எனவே இந்த ஆமை அவதாரம் நமக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணி பார்க்க வாய்ப்பு உண்டு.

காலப்போக்கில் இறைவன் மிருகங்களின் வடிவங்களை புறக்கணித்துவிட்டு நரசிம்மராக அதாவது மனித சிங்கமாக அவதரித்தார். இங்கேயும் மக்களுக்கு வயிற்றைக் கிழித்துக் கொல்ல நம் எதிரே ஒரு இரணியகசிபு இல்லை. ஆகையால் நரசிம்மரை முன்னோடியாக வைத்துக் கொண்டு தமது வாழ்க்கையை நடத்த முடியுமா என்று தோன்றியிருக்கலாம்.

பிற்காலத்தில் பகவான் உத்தம புருஷர் ஆன ராம அவதாரம் செய்தார். அப்பொழுது மக்களால் இவர் நம்மை போலவே இருக்கிறார். அவருக்கும் நம்மைப்போலவே தாயும் தந்தையும் சகோதரர்களும் மனைவியும் உண்டு. நம்மிடம் உள்ளது தான் அவர் இடத்திலும் இருக்கிறது. நாம் கொஞ்சம் கஷ்டங்களை அனுபவிக்கிறோம். ஆனால் அவர் நம்மைக் காட்டிலும் அதிகமான துயரங்களை அனுபவித்து இருக்கிறார். காட்டிலே வாழ்வில் 14 வருடங்கள் அவர் கழிக்க வேண்டியதாயிற்று. இப்படி உள்ள போது நாம் நமது சிறிய சிறிய கஷ்டங்களை கூட பெரிதாக எண்ணி வருத்தப் படுகிறோம். ஆகையால் இவர் நமக்கு காட்டிய மார்க்கம் தான் நாம் கடைபிடிக்க தகுந்ததாக உள்ளது என்று எண்ணினார்கள்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

மற்றவர்களுக்கு உதவி புரிய வேண்டுமென்ற பாடத்தை பசு போன்ற மிருகங்கள் வாழ்க்கையில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். கடவுள் கன்றிற்காக பால் படைத்தார் இருந்தும் மனிதர்களுக்கும் கிடைக்கிறது. அதன் சாணம் வயலுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. பசுவின் மூத்திரம் கூட புனிதமாக கருதப்படுவதால்தான் சுத்தி செய்வதற்கு கோமியத்தில் அதை சிறிதளவு சேர்க்கிறார்கள். பசுவின் சாணம் மூத்திரம் நெய் தயிர் பால் ஆகியவைதான் பஞ்சகவ்யம். இப்படி பார்த்த நமக்கு எல்லா விதத்திலும் உதவியாக உள்ளது எல்லாவித மிருகங்களின் தோல்களை மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். தோல் பொருட்களால் மிகவும் கவரப்பட்டு நாம் அவற்றைப் செருப்பு பர்ஸ் பேக் என பலவித பொருட்களில் பயன்படுத்துகிறோம். எனவே இறந்துபோன மிருகம் கூட மற்றவர்களுக்கு பயன்படுகிறது. அதே சமயத்தில் இதனை ஒரு மனிதனின் தோல்களால் செய்யப்பட்டிருந்தால் அதை பார்ப்பவர்கள் வெறுப்படைந்து தொட கூட மாட்டார்கள். மனிதன் இறந்த பிறகு எந்த விதத்திலும் உபயோகப்படாத காரணத்தால் அவன் ஏதாவது நன்மை புரிய வேண்டும் என்று விரும்பினால் அதை உயிருள்ள பொழுதே செய்துவிட வேண்டும். எனவே தான் மற்றவர்களுக்கு உதவி புரியாத ஒருவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன? இறந்த பிறகும் மற்றவர்களுக்கு தங்கள் தோல்களால் சேவை புரியும் மிருகங்கள் நீண்டகாலம் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. பிறர் நலத்தை பேணுதல் எனும் நற்குணத்தை நமது சாஸ்திரங்கள் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து போற்றுகின்றன.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Related articles

Recent articles

spot_img