Home உரத்த சிந்தனை என்ன நடக்கிறது ஸ்வீடனில்?

என்ன நடக்கிறது ஸ்வீடனில்?

கடந்த சில நாட்களாக ஸ்வீடன் இஸ்லாமிய கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள்

swedan-riots
swedan-riots

கடந்த சில நாட்களாக ஸ்வீடன் இஸ்லாமிய கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதினை பெரும்பாலான இந்தியர்கள் அறிந்தேயிருப்பார்கள் என நினைக்கிறேன். இந்தியாவைப் போல அல்லாமல் ஸ்வீடன் ஒரு பணக்கார ஐரோப்பிய நாடு. இயற்கையழகும், செல்வமும், அமைதியும் கொட்டிக் கிடக்கும் ஸ்கேண்டிநேவிய நாடுகளில் ஒன்று. ஸ்வீடிஷ் குடிமக்கள் மிக அமைதியானவர்கள். அவர்களின் வரலாற்றில் வன்முறைகள் எதுவும் இருந்ததில்லை.

பெரும்பாலான ஸ்வீடிஷ் குடிமக்கள் அடுத்தவர்களின் மீது அக்கறையும், அன்பும் கொண்டவர்கள். அதற்கும் மேலாக ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் எதுவுமில்லாத நாடு. பொதுவில் ஸ்வீடிஷ் குடிமகனுக்கு மாண்ட பிறகு கிடைக்கிற சொர்க்கம், நரகத்தில் எல்லாம் நம்பிக்கையில்லாத, முற்போக்கு எண்ணம் கொண்டவன்.

அப்படிப் பட்ட ஸ்வீடன் இன்றைக்குக் கந்தலாகிக் கிடக்கிறது. அங்கு நடந்த, நடக்கும் நிகழ்வுகள் நம்பவே இயலாதவை. இப்படியும் ஒரு அப்பாவி தேசமா என்று வியக்க வைக்கிறது ஸ்வீடன். அதிகாரத்தில் இருக்கும் அந்த நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சொந்த நாட்டை வேண்டுமென்றே தங்களின் சுய நலத்திற்காகக் கந்தலாக்கிவிட்டார்கள். அத்தனையும் அதிகாரத்திற்காக. பதவிக்காக.

அதனைக் குறித்து சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஸ்வீடன் 1930-வருடத்திலிருந்து ஒரே ஒரு கட்சியால் (SDP – Social Democratic Party) ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய எட்டு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் சிறிய கட்சிகள்தான். அதற்கும் மேலாக அந்தக் கட்சிகளுக்குள் ஒற்றுமையில்லை. எனவே SDP கட்சியின் ராஜாங்கம்தான் இன்றுவரைக்கும்.

இந்த SDP கட்சி ஏறக்குறைய இந்தியாவின் காங்கிரஸ் கட்சி மாதிரியானது. அத்தனை வருடம் ஆட்சியில் இருந்தால் எல்லாக் கட்சியும் காங்கிரசைப் போலத்தான் இருக்கும் என்பது வேறுவிஷயம். 1970-ஆம் வருடம் வரையில் ஸ்வீடனில் வாழ்ந்தவர்களில் 99 சதவீதம் பேர்கள் அந்த நாட்டின் பூர்வ குடிகளான வெள்ளையர்கள். 1970 காலகட்டத்தில் ஸ்வீடனுக்கு அதிபரான ஒலாஃப் பால்மே தன்னைக் கொஞ்சம் உலக விஷயம் தெரிந்த, பெரியதொரு லிபரலாக எண்ணிக் கொண்டவர். ஸ்வீடனின் இன்றைய துயரம் அவரிடமிருந்துதான் துவங்குகிறது.

ஸ்வீடனில் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். எனவே அதற்குக் கொஞ்சம் வண்ணம் கூட்ட பிற நாட்டிலிருந்து அகதிகளை ஸ்வீடனுக்குள் அனுமதிக்க முடிவெடுக்கிறார் பால்மே. அதில் இன்னொரு காரணமும் இருந்தது. அவரது SDP கட்சிக்கு ஆதரவு ஸ்வீடிஷ் குடிமக்கள் மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் தனது கட்சிக்கு ஆதரவு குறைந்து விடும் என்று கணக்குப் போட்ட ஒலாஃப் பால்மேயும், அவரது கட்சிக்காரர்களும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்குக் கதவினைத் திறந்துவிட்டார்கள். அவ்வாறு உள்ளே வருபவர்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். அவர்கள் அத்தனைபேர்களும் SDP கட்சிக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும். அவ்வாறு ஓட்டுப் போட்டால் அவர்களுக்கு அத்தனை வசதிகளும் ஸ்வீடனில் செய்து தரப்படும்.

இது அத்தனையும் ரகசியமாக மட்டுமே செய்யப்பட்டது. ஸ்வீடிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல், ஒப்புதல் வாங்கப்படாமல், வெறும் சுய நலத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்ட முடிவு அது. பெரும்பாலான ஸ்வீடிஷ் குடிமக்களுக்கு அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்ட விவரமே தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். எல்லாம் சத்தமில்லாமல் நிகழ ஆரம்பித்தது.

ஸ்வீடன் தன் கதவுகளைத் திறந்த செய்தி கேட்ட சவூதி, கத்தாரிய, பாலஸ்தீனிய, ஆப்பிரிக்க, பாகிஸ்தானிய இன்னபிற முஸ்லீம்கள் ஸ்வீடனுக்குள் நுழைய ஆரம்பித்தார்கள். சமீபத்தில் துருக்கி வழியாக ஜெர்மனிக்குச் சென்ற மில்லியன் முஸ்லிம் அகதிகளுடன் சென்ற இன்னும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஸ்வீடனை அடைந்தார்கள். இதன் காரணமாக ஸ்வீடனின் முஸ்லிம்கள் எண்ணிக்கை தாறுமாறாக உயர ஆரம்பித்தது. 1970களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் இருந்த ஸ்வீடிஷ் குடிமக்கள் இன்றைக்கு வெறும் எழுபது சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். இன்றைய ஸ்வீடனின் முப்பது சதவீத மக்கள்தொகை முஸ்லிம்களால் ஆனது. இது அத்தனையும் கடந்த இருபது அல்லது இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள் நடந்த விஷயம் என்பதினை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அவ்வாறு ஸ்வீடனுக்குள் நுழையும் ஒவ்வொரு முஸ்லிம் “அகதி”க்கும் கிடைக்கும் உதவியைக் கேட்டால் மலைத்துவிடுவீர்கள்.

ஸ்வீடனுக்குள் நுழையும் முஸ்லிம் அகதி முதல்வேலையாகத் தனது பாஸ்போர்ட்டைத் தூக்கிக் கண் காணாமல் எறிந்துவிடுவான். எனவே அவன் யார், எங்கிருந்து வருகிறான் என்கிற விவரத்தைக் கண்டுபிடிக்கவே முடியாது. அதைப்பற்றியெல்லாம் ஸ்வீடிஷ் இமிக்ரேஷன் அதிகாரிகளுக்குக் கவலையில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் அவன் ஒரு அகதி. அவ்வளவுதான். அதற்கும் மேலாக அந்த அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பவனெல்லாம் SDP கட்சிக்காரன். அல்லது SDP கட்சியால் நியமிக்கப்பட்டவன். அவனுடைய வேலை அந்த அகதிக்கு உடனடியாக ஸ்வீடிஷ் அடையாள அட்டை வழங்குவது மட்டும்தான். அவனைப் பொறுத்தவரையில் அந்த அகதி அவனுடைய கட்சிக்கான ஒரு ஓட்டு! (எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதோ?)

அந்த அடையாள அட்டை வாங்கிய அகதி மூன்றுவருடங்கள் ஸ்வீடனில் வாழ்ந்தால் அவனுக்குக் குடியுரிமை வழங்கப்படும். அவன் தேர்தல்களில் ஓட்டுப் போடலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த அகதிக்கு ஸ்வீடனைக் குறித்தோ, அதன் வரலாற்றைக் குறித்தோ, ஸ்வீடிஷ் மொழி அறிந்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் தேர்வுகள் எல்லாம் இல்லை. நேரடியாகக் குடிமகன்தான்.

ஸ்வீடனில் நுழைந்தவுடன் அந்த முஸ்லிம் அகதிக்கு உடனடியாக அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்படும். அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். மருத்துவம் பார்ப்பதற்கு ஒரு ஸ்வீடிஷ் குடிமகன் பல ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டவேண்டிய இடத்தில் அந்த அகதி வெறும் $5 டாலர் மட்டும் கட்டினால் போதும். மருந்திலிருந்து, ஆஸ்பத்திரிச் செலவிலிருந்து எல்லாமே வெறும் $5 டாலர்தான். அதற்கும் மேலாக அந்த அகதிக்கு மாதம் $2000 அல்லது அதற்கும் மேலாகத் தரப்படும். நம்புங்கள். இன்றுவரை ஸ்வீடனில் இதுதான் நடைமுறை.

அதாகப்பட்டது கஷ்டப்பட்டுப் படித்து, வேலையில் அமர்ந்து, வரி கொடுக்கிற ஸ்வீடிஷ் குடிமகனுக்கு எதுவுமே இலவசமில்லை. ஸ்வீடனுக்குள் அகதி என்கிற போர்வையில் நுழைந்து எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறவனுக்கு சகல வசதிகளும் உண்டு. அவன் எந்த வேலையும் செய்வதில்லை. எதற்காக அவன் வேலை செய்யவேண்டும்?

அதில் வேடிக்கை என்னவென்றால், ஸ்வீடனுக்குள் தனது நான்கு மனைவிகளுடன் நுழைகிற முஸ்லிம் ஏறக்குறைய ராஜ போகத்தில் திளைக்கிறான். ஸ்வீடிஷ் அரசாங்கம் அவனுக்குத் தனியான அப்பார்ட்மெண்டை ஒதுக்குவதுடன் மட்டுமல்லாமல், அவனது ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு தனித்தனி அப்பார்ட்மெண்டை ஒதுக்குகிறது! நம்பாதவர்கள் இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளலாம். அதற்கும் மேலாக ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக உதவித்தொகை மாதாமாதம் அளிக்கப்படும். ஒருவேலையும் செய்யாமல் ஏறக்குறைய மாதம் $10,000 உதவித்தொகை வாங்குகிற ஏராளமான முஸ்லிம்கள் ஸ்வீடனில் உண்டு. நான் சொல்வதினை நம்பாதவர்கள் இணையத்தில் தேடிப் படியுங்கள்.

அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கான உதவித்தொகையை விட்டுவிட்டேன். அதனையும் சேர்த்து கொள்ளுங்கள்.

இதையெல்லாம் பார்க்கிற ஒரே ஒரு மனைவியுடன் வருகிறவன் மீண்டும் தன் சொந்த நாட்டுப் போய் மேலும் மூன்று மனைவிகளுடன் திரும்புகிறதும் சர்வசாதாரணம்.

இப்படியாக ஸ்வீடனில் முஸ்லிம்களின் தொகை கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது. எவனும் பள்ளிக்குப் போவதில்லை. ஸ்வீடிஷ் மொழி கற்பதில்லை. தங்கள் ஏரியாவில் கூட்டம் கூடி கும்மாளமடிப்பதுடன் சரி. ஏனென்றால் எல்லாமே அவனுக்குச் சும்மா கிடைக்கிறது. இவர்களில் முப்பது வயதிற்குக் குறைந்தவர்கள் அதிகம்பேர்கள் ஸ்வீடனில் இருக்கிறார்கள். அவர்களே வெள்ளைக்காரப் பெண்களையும், சிறுவர்களையும் கற்பழிப்பதில் முதலிடத்தில் நிற்கிறார்கள். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருந்த ஸ்வீடனில் இன்றைக்குப் பெண்கள் தெருவில் நடக்கவே அஞ்சுகிறார்கள். தங்களின் குழந்தைகள் தாக்கப்படுவதனைக் காணும் ஸ்வீடிஷ் குடிமகன் உடனடியாகத் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேற முயன்று கொண்டிருக்கிறான். இதுதான் இன்றைய நிதர்சனம்.

முஸ்லிம்கள் ஒரு இடத்தில் முப்பது சதவீதமானால் அங்கு ஷரியாச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். எனவே ஸ்வீடனின் பல பகுதிகள் இன்றைக்கு ஷரியா பகுதிகளாக மாறிவிட்டன. ஸ்வீடிஷ் போலிஸ்காரர்கள் மிகவும் சாந்தமானவர்கள். மனிதாபிமானத்துடன் செயல்படுபவர்கள். ஆனால் முஸ்லிம்களோ வலிமைக்கு மட்டுமே அஞ்சுபவர்கள். தங்களை மென்மையாக நடத்தும் ஸ்வீடிஷ் போலிஸ்காரனைப் பார்த்துச் சிரிக்கிற முஸ்லிம் அவர்கள் மீது கல்லெறிந்தும், காயப்படுத்தியும் இன்றைக்கு மகிழ்ந்து கொண்டிருக்கிறான்.

இதற்கெல்லாம் காரணமான SDP கட்சியும், அதன் அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் முஸ்லிம்களின் முப்பது சதவீத வாக்குவங்கி அவர்களுக்குத் தேவை. எல்லா முஸ்லிமும் SDPக்கு மட்டுமே வாக்களிப்பான் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்குக் கொடுக்கிற சலுகைகள் அப்படியானது.

ஸ்வீடன் இந்த மாயச்சுழலில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்றே நான் கருதுகிறேன். ஸ்வீடன் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும் அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறது. ஸ்வீடனுடன், டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் இதே கதி காத்துக் கொண்டிருக்கிறது.

ஸ்வீடனுக்கும், அதன் மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பவித்தனமாக பாம்புக்குப் பால் வார்த்தது அவர்களின் தவறு மட்டுமேயன்றி வேறென்ன? இதில் இந்திய ஹிந்துக்களுக்கும் எச்சரிக்கை இருக்கிறது. அதேசமயம் இந்திய ஹிந்துக்களுக்கும், ஸ்வீடிஷ் மக்களுக்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை

  • நரேந்திரன் – PS

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »