இந்த மாஸ்க் போட்டு வேலை செய்.. மயக்க மருந்து தடவிய மாஸ்க் கொடுத்து பாலியல் வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
mask

வேலைக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு ஒரு காண்ட்ராக்டர் மாஸ்க்கில் மயக்க மருந்தை கலந்து, மயக்கமடைய செய்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பஞ்சாபில் உள்ள ஜிராக்பூர் நகரில் சந்த்ராஜ் யாதவ் என்பவர் ஒரு ஒப்பந்த காரர் .அவரிடம் ஏராளமான பெண்களும் ஆண்களும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில் அந்த பகுதியிலிருக்கும் ஒரு பெண் அவரிடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி வேலை கேட்டு போனார். அப்போது அந்த காண்ட்ராக்டர் அந்த பெண்ணுக்கு வேலை கொடுப்பதாக கூறி வேலை நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்.

பிறகு அந்த பெண்ணுக்கு அவர் ஒரு மாஸ்க் கொடுத்து இந்த கொரானா நேரத்தில் இதை அணிந்து கொண்டுதான் வேலை செய்ய வேண்டுமென்று கூறி போட்டுக்கொள்ள சொன்னார் .அதை வாங்கிய அந்த பெண் அந்த மாஸ்க்கை அணிந்து கொண்டார்.

அதை அணிந்து கொண்ட சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் வந்தது இதனால் அவர் மயங்கி அங்கேயே சுய நினைவிழந்து கீழே விழுந்தார். அப்போது அந்த ஒப்பந்தக்காரர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

vankodumai

அந்த பெண் சுய நினைவு வந்து பார்த்த போது தன்னுடைய ஆடைகள் கலைந்து கிடப்பதையும், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும் உணர்ந்த அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

அப்போது அருகேயிருந்த அந்த ஒப்பந்தக்காரரிடம் இது பற்றி கேட்டபோது ,இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அந்த பெண்ணை அனுப்பியுள்ளார் .

பிறகு வீட்டுக்கு வந்த அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய தாயார் மற்றும் சகோதரிகளிடம் தெரிவித்த போது அவர்கள் போலீசில் அந்த ஒப்பந்தக்காரர் மீது புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஒப்பந்தக்காரரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.