இன்ஸ்டாகிராமில் உள்ள பெண்கள் படத்தை எடுத்து மார்பிங் செய்து வெளியிட்ட அல்பாஸ் ஜமானி கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
insta
insta

சமூக வலைத்தளம் மூலமாக பெண்களை தொடர்பு கொண்டு அவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து அவர்களுடைய நிர்வாண புகைப்படங்களை சேகரித்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் மகுவா கிராமத்தில் வசித்து வருபவர் தான் அல்பாஸ் ஜமானி 20 வயதான இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு அங்கிருக்கும் ஒரு ஆலையில் வேலை செய்து வந்திருக்கிறார்.

அப்போது அந்த இளைஞர் பல பெண்களிடம் செய்த ஏமாற்று வேலைதான் இப்போது அவரை கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கிற அளவிற்கு சென்றிருக்கிறது.

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று அதில் அழகான பெண்களின் புகைப்படங்களை திருடி இருக்கிறார்.

பிறகு அதை மார்பிங் செய்து நிர்வாண போட்டோவாக மாற்றி. அந்த புகைப்படங்களை பல பெண்களுக்கு அனுப்பி. இதுபோல கட்டுடலை நீங்கள் பெற வேண்டும் என்று நினைத்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி வந்திருக்கிறார்.

இதே போல பல பெண்களுடைய போட்டோக்களை திருடி அதை மார்பிங் செய்து முறைகேடு செய்து கொண்டிருந்ததை சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணுடைய அப்பா கவனித்திருக்கிறார். உடனே அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதன் பேரில் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இன்னும் நிறைய அதிர்ச்சி தரும் தகவல்களை கூறி இருக்கிறார்கள்.

அதாவது அந்த இளைஞரின் செல்போன் மற்றும் மடிக்கணினியை சோதனை செய்தபோது 700க்கும் மேற்பட்ட பெண்களுடைய போட்டோக்களை மார்பிங் செய்து வைத்திருந்திருக்கிறார் என்பது தெரியவந்து இருக்கிறது. இன்னும் அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.