தான் தோல்வியுற ஆசிரியரே காரணம்: மருத்துவ மாணவி பரபரப்பு புகார்!

இந்தியா கல்வி கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
woman

ஒரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் மீது அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியொருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளது பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் டாக்டர் விவேக் சவுத்ரி என்பவர் அந்த மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவியிடம் மார்க் வேணும்னா அந்த விஷயத்துக்கு சம்மதிக்க வேண்டுமென டீல் பேசியதாக புகார் வந்துள்ளது

அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஒரு மெடிக்கல் மாணவி , சீனியர் மருத்துவ பேராசிரியர் சௌத்திரி மீது, தான் அவருக்கு ஆசைக்கு இணங்க மறுத்ததால் தேர்வில் தோல்வியுற செய்தார் என்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு உண்டாக்கியுள்ளார் .

கடந்த வாரம் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் ரிசல்ட் வெளியானபோது அந்த குறிப்பிட்ட மாணவி தேர்வில் தோல்வியுற்றதால் அவர் தன்னுடைய வகுப்பு தோழர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு மகளிர் ஆணையத்திடம சென்று அந்த மருத்துவ பேராசிரியர் மீது இப்படி பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் .’

இதன் காரணமாக அந்த கல்லூரி நிர்வாகம் அவரை விசாரணைக்கு அழைத்து விசாரித்த போது அவர் அந்த மாணவி சரியாக படிக்கவில்லையென்றும் தவறான ஒருவரை மருத்துவராக்கி இந்த சமுதாயத்தை தாம் சீர்குலைக்க விரும்பவில்லையென்றும் இதனால் தான் அவரை தோல்வியுற செய்தேன் என்றும் இதன் காரணமாக தம் மீது அவர் வேண்டுமென்றே போலியான குற்றச்சாட்டை கூறுகிறார் என்றும் பதில் அளித்தார் .

மேலும் இந்த புகார் காரணமாக அந்த பேராசிரியருக்கு மகளிர் ஆணையமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.