திருப்பதி தேவஸ்தான ஈஓ., அனில்குமார் இடமாற்றம்!

இந்தியா சற்றுமுன்
ttd-official-transfer
ttd-official-transfer
  • திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கல் பணிமாற்றம்.
  • இன்சார்ஜாக தர்மாரெட்டிக்கு பொறுப்புகள்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் எக்சீக்யூடிவ் ஆபீசர் அனில்குமார் சிங்கலை ஆந்திர பிரதேச அரசாங்கம் பணி மாற்றம் செய்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ ஆரோக்கிய துறை பிரதான காரியதரிசியாக நியமித்துள்ளது. இதன்படி புதன்கிழமை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

2017 மே முதல் டிடிடி ஈவோ வாக அனில்குமார் சிங்கல் பொறுப்பு நிறைவேற்றி வந்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.

டிடிடி அடிஷனல் ஈவோவாக உள்ள தர்மாரெட்டிக்கு டிடிடி முழு அதிகப்படியான பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. தாற்காலிகமாக தர்மாரெட்டி பொறுப்புகளை நிர்வகிப்பார்.

புதிய ஈவோ. வாக ஜவஹர் ரெட்டியை நியமிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் மருத்துவ ஆரோக்கியத்துறை பிரத்தியேக பிரதான காரியதரிசியாக உள்ளார். இதன்படி சிங்கல் மருத்துவ ஆரோக்கியத்துக்கு செல்வதால், டிடிடி ஈவோவாக ஜவக்ஹர்ரெட்டி செல்ல உள்ளார்.

தன்னை டிடிடி ஈவோ ஆக நியமிக்க வேண்டும் என்று ஜவஹர்ரெட்டி கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

1993 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த அனில்குமார் சிறந்த அதிகாரியாக பெயர் வாங்கியவர். ஆனால் அவரை டிடிடி ஈவோ வாக நியமித்த போது விமர்சனங்கள் வெளிவந்தன. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போதைய அரசாங்கம் அவரை நியமித்தது.

அதன்பின் ஒய்சிபி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றியது. ஒன்றரை ஆண்டுகளாக சிங்கல் ஈவோவாக பணிபுரிந்து வருகிறார். ஆனால் திடீரென்று பணி மாற்றம் செய்வது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

ஜவஹர்ரெட்டி கேட்டார் என்பதற்காக பணிமாற்றம் செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.