தெலங்காணா சிறுவனுக்கு ரூ.20 லட்சம்… உதவிய சோனுசூட்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sonu-sood
sonu-sood
  • மீண்டும் சோனூசூட் வள்ளல் தன்மை வெளிப்பட்டுள்ளது.
  • தெலங்காணா சிறுவனுக்கு இருபது லட்ச ரூபாய் உதவி.

லாக்டௌன் நேரத்தில் பலரையும் சொந்த கிராமங்களில் சேர்ப்பதற்காக பஸ்களை விமானங்களை ஏற்பாடு செய்து சோனூசூட் தங்கள் இருப்பிடங்களுக்கு அவர்கள் சென்று சேர்வதற்கு உதவினார் என்ற செய்தி தெரிந்ததே!

லாக்டௌன் நேரத்தில் கொரோனாவை பொருட் படுத்தாமல் ஏழை மக்களுக்கு தன்னாலான உதவி செய்து வரும் நடிகர் சோனூசூட் மீண்டும் ஒருமுறை தன் நல்ல மனதை வெளிப்படுத்தியுள்ளார்.

உடல்நலம் சரி இன்றி அவஸ்தைப் பட்டு வந்த தெலங்காணா மஹபூபாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற 6 வயது சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்க அவர் முன்வந்துள்ளார்.

டோர்னக்கல் மண்டலம் பெருமான்ட்ல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஹர்ஷவர்தன் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறான். இதனால் இந்த சிறுவனின் பெற்றோர் வியாழக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள சோனூசூட்டை சந்தித்தனர். மருத்துவத்திற்காக 20 லட்சம் செலவாகும் என்று விவரித்தனர். மனம் இரங்கிய சோனூசூட் சிறுவனின் மருத்துவ செலவுகளை நான் ஏற்கிறேன் என்று வாக்களித்தார்.

நாகராஜு, லட்சுமி தம்பதிகளின் மகன் ஹர்ஷவர்தன். ஆறுமாத சிறு குழந்தையாக இருந்த போதிலிருந்தே கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறான். அப்போதிலிருந்து சிறுவனுக்கு சிகிச்சை செய்தபடி மருந்துகள் கொடுத்தபடியே உள்ளார்கள். அண்மையில் சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். சிறுவனின் கல்லீரலை மாற்று அறுவைசிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறி விட்டனர். அதற்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்தனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

ஆர்டிசி டிரைவராக பணிபுரியும் நாகராஜுக்கு அத்தனை பணம் செலவழிக்கும் வசதி இல்லாததால் சோனூசூட்டை சந்திக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஒரு சினிமா ஷூட்டிங்குக்காக அவர் வியாழக்கிழமை ஹைதராபாத் வந்ததாக தெரிந்துகொண்ட நாகராஜு தம்பதிகள் சிறுவனையும் தம்முடன் அழைத்துக் கொண்டு அவரை சந்தித்தார்கள். மகனின் பிரச்சினையை சோனூசூட்டிடம் விவரித்தார்கள். அதைக் கண்டு மனமிரங்கிய சோனூசூட் சிறுவனை உடனே அப்போலோ ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியாகவும் அறுவை சிகிச்சைக்கு தேவையான இருபது லட்சம் ரூபாயை தானே தருவதாகவும் அறிவித்தார்.

அதே நாள் மாலை சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான பரிசோதனைகளை நடத்தியதாக தந்தை நாகராஜு தெரிவித்தார். மகனுக்கு மறுபிறவி அளிக்கும் சோனு சூட்டுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.