
தமிழகத்தில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தரமற்ற பொருட்களாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பட்டு ஆணையம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சு தன்மை அதிகமாக இருப்பதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் (FSSAI), சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது பாதுகாப்பற்ற உணவுகளை தமிழகத்தில் தான் அதிகளவில் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) வெளியிட்டுள்ள அறிக்கையில்
12.7 % சதவீத உணவுகள் பாதுகாப்புற்றதாகவும் இருக்கிறது.
பின்னர் உணவு தரம் பார்க்கும் சோதனையில் தமிழகத்தில் சுமார் 5,730 விதமான உணவு பொருட்கள் சோதனையில் 728 வகையான உணவுகளில் தரம் குறைவாகவும், கலப்படம் அதிகம் உள்ளதாகவும் தெரியப்பட்டது.
இதனால் மக்கள் வெளியில் சென்று சாப்பிடும் பொருட்களில் கலப்படம் இருப்பதாலும், அல்லது உணவு பொருட்களை வாங்கும் போது கவனமாக பார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



