
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இதன் மூலம் வழங்கப்படும்.
பொங்கலை முன்னிட்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோவும், 2 அடி நீள கரும்புத் துண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் என பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் இருக்கும். இதற்காக, தமிழக அரசு 2,363 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த சிறப்புத் தொகுப்பு வழங்கல் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
மேலும் தொடங்கி வைக்கப் பட்டவை…
- டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வனச் சரகர்களுக்கு பணி நியமன ஆணைக:ள் வழங்கல்.
- தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் 32 உதவிபொறியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கல்
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மூலம் ரூ. 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 43 இருக்கைகள் கொண்ட வால்வோ சொகுசு பேருந்துகள் கொடியசைத்து தொடங்கி வைத்தல்.
- மின்சாரத்தில் இயங்கும் இந்தியாவின் முதல் எம்-ஆட்டோக்களை கொடியசைத்து தொடங்கி வைத்தல்.