குளிக்கப் சென்ற மாணவி! மறைத்து செல்போனில் படம்.. இளைஞன் கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
bath - 2026

குளியலறைக்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவியை படம் பிடிக்க முயன்றதாக இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனகிரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டுக்குள் உள்ள குளியலறைக்கு வழக்கம் போல குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஒரு இளைஞர் கையில் செல்போனுடன் பதுங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சத்தம் போட்டு அலறினர்.

உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை பிடித்து அடித்தனர். அந்த இளைஞரிடம் விசாரித்த போது, அவர் புவனகிரி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

மாணவி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து, அதை வைத்து மிரட்டி காசு வாங்க அந்த நபர் திட்டமிட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரித்து விவரங்களை சேகரித்துக் கொண்டனர். பின்னர் மாணவி குளிப்பதை படம் பிடிக்க முயன்ற வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.