ஏப்ரல் 14, 2021, 1:12 காலை புதன்கிழமை
More

  ஊசி போட்ட மறுவினாடி மயங்கி உயிரிழந்த பெண்!

  muthupanti selvapriya - 1

  சிவகங்கை மாவட்டம் ஏரியூர் அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி – செல்லப் பிரியா தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

  இந்நிலையில் செல்லப்பிரியா கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தலை பாரமாக உள்ளதென்று மதகுப்பட்டியில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார் அவரது கிளினிக்கில் தலைவலிக்கு சிகிச்சை அளித்து, மூன்று ஊசிகள் போட்டிருக்கிறார். ஊசி போட்ட சில நிமிடங்களில் செல்லப்பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

  மருத்துவர் செந்தில் குமார் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாக தான் செல்லப் பிரியா இறந்தார் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, மதகுப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

  ஆனால் புகார் கொடுத்து 33 நாட்ளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், செல்லப் பிரியாவின் குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

  தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குரல்கள் எழுந்துள்ளன. மருத்துவருக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம், அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடந்தையாக செயல்படுவதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்று காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

  இது குறித்து செல்லப்பிரியாவின் கணவர் முத்துப்பாண்டி,“என் மனைவிக்கு தலைவலி என டாக்டர் செந்தில்குமாரின் கிளினிக்கிற்கு கூட்டிச் சென்றேன். இரண்டு நரம்பு ஊசிகள், இடுப்பில் ஒரு ஊசினு மொத்தம் மூணு ஊசி போட்டார். ஊசி போட்ட சில நிமிடத்திலேயே என் மனைவி மயங்கி விழுந்துவிட்டார். என் மனைவியை 108 ஆம்புலன்ஸில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அங்கு தெரிவித்துவிட்டனர்.

  தவறான ஊசி போட்டதால் தான் என் மனைவி இறந்தார். எனவே தவறாக சிகிச்சை அளித்த டாக்டர் செந்தில்குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  15 − fifteen =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »