ஆபாசப் படம் காட்டி சிறுமியிடம் அத்துமீறிய 68 வயது பெரியவர்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை
Pornography-1
Pornography-1

தனியே வசித்த முதியவர் ஒருவர் சிறுமிகளிடம் ஆபாச படம் காமித்து பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டார்

சென்னையின் எண்ணூர் பகுதியில் வசிக்கும் புஷ்பராஜ் என்ற 68 வயதான ஒரு பெரியவர் அங்குள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.

அவரை பராமரிக்க ஒரு 38 வயதான பெண் அங்கு நியமிக்கப்பட்டு அடிக்கடி அந்த பெரியவருக்கு தேவையான உதவிகளை செய்து விட்டு போவார். அப்போது அந்த பெரியவரின் வீட்டுக்கு வரும் அந்த பெண் தன்னோடு தனது 12 வயதான மகளையும் அந்த வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

அப்போது அந்த பெரியவர் அந்த 12 வயதான சிறுமியிடம் தன்னுடைய செல்போனை கொடுத்து விளையாட சொல்வார். அப்போது அவரின் செல்போனை வாங்கி அந்த சிறுமி பார்த்தபோது அவரின் போனிலிருக்கும் ஆபாச படங்களை பார்த்து மிரண்டு போயுள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுமியிடம் அந்த பெரியவரே அந்த படங்களை பார்க்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதன் பிறகு அவர் அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.

அதனால் அந்த தாயார் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்தார். அப்போது போலீசார் அந்த புஷ்பராஜை பிடித்து விசாரித்த போது அவர் இது போல பல சிறுமிகளிடம் ஆபாச படம் காமித்து பாலியல் துஷ்பிரயோகம் கொடுத்த விவரத்தை கண்டறிந்தார்கள். அதன் பிறகு சனிக்கிழமை போலீசார் அந்த புஷ்பராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.