நீண்ட நாட்களாய் ஓடாத லாரி! உள்ளேயிருந்த ஆண் எலும்புக்கூடு!

Published:

lorry accident child died
lorry

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் இருந்த ஒரு காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த லாரியானது கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சேற்றில் சிக்கி இருந்துள்ளது.

இந்நிலையில் லாரியில் இருந்த தண்ணீர் வடிந்து விட்டதால் லாரியை வெளியே எடுத்து பழுது பார்க்க லாரியின் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். அதன்படி லாரியை அங்கிருந்து வெளியே எடுக்கும்போது, டிரைவர் இருக்கையின் அருகே அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு இருந்ததை பார்த்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் நீண்ட நாட்களாக லாரி எடுக்கப்படாமல் ஒரே இடத்தில் நின்றதால் மதுபோதையில் லாரியில் ஏறி படுத்த நபர் அப்படியே இறந்து எலும்புக் கூடாய் போய் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரியில் கிடந்த அந்த எலும்புகூடு நபர் யார் என்றும், அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related articles

Recent articles

spot_img