நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி., வேணுகோபால் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்பட தேவையான நிதியை இன்னும் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தன் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மத்திய அரசு மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் காவிரி ஆணையம் அமைத்த மத்திய அரசுக்கு நன்றி. காவிரியில் முறையாக தண்ணீரை திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே உள்ளதால், 2019 ஆட்சி குறித்து மக்களே முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்
Popular Categories



