அழகான உன் மனைவியை உன் முன்னாலே அனுபவிப்போம்.. பக்கத்து வீட்டார் பேச்சால் ஆசிரியர் தற்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
poison
poison

தனது மனைவியை கேலி செய்து பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டிய பக்கத்து வீட்டு காரர்களுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்.

உத்தரபிரதேசத்தின் லக்னோவின் பஹ்ரைச்சில் வசிக்கும் ஒரு அரசு பள்ளியின் ஒருவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு கல்யாணமாகி அழகான மனைவி இருக்கிறார். அதனால் அவருடன் வேலை பார்க்கும் பல ஆசிரியர்களுக்கு அவர் மீது பொறாமை கொண்டுள்ளார்கள்.

மேலும் அவர்கள் அவரின் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்கள்.
அந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் நான்கு ஆசிரியர்கள் அவரின் மனைவியை தினமும் கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் அந்த ஆசிரியரிடம் அவர்கள், அவரின் மனைவியை அவரின் கண் முன்னாடியே பாலியல் பலாத்காரம் செய்வோம் என்று மிரட்டியுள்ளார்கள். இதனால் அந்த ஆசிரியர் மிகவும் மிரண்டு போயுள்ளார்.

மேலும் இந்த மிரட்டல் விவகாரத்தை அவர் தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் கூறியுள்ளார்‌. பின்னர் மறுநாள் அந்த ஆசிரியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பள்ளி கூடத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை பற்றியும், அந்த ஆசிரியர் நண்பர்களுக்கு அனுப்பிய மிரட்டல் செய்திகளையும் அந்த நண்பர்கள் போலீசில் தெரிவித்துயுள்ளார்கள். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அவரின் பக்கத்து வீட்டில் வசித்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.