விவேக் மறைவு: பிரதமர் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
pm-modi
pm-modi

நடிகர் விவேக், சிகிச்சை பலன் இன்றி இன்று காலை 4 :35 மணியளவில் உயிரிழந்தார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் வெளியான உடனேயே ரசிகர்களும், பிரபலங்களும் விவேக் வீட்டின் முன் குவிய துவங்கிவிட்டனர். ரசிகர்கள் பலர்,

சமூக இடைவெளியை கடைபிடித்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதே போல் பிரபலங்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கண்ணீரோடு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்திருந்தனர்.

அவர்களை தொடர்ந்து தற்போது, பாரத பிரதமர் மோடி… விவேக் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: ” நடிகர் விவேக்கின் திடீர் மரணம் எனக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விவேக் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.