வரி ஏய்ப்பு செய்த நிறுவனம்! கைது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
money 2
money 2

மதுரையில் தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் 13 3/4 கோடி ரூபாயை வரிஏய்ப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பல்வேறு துறைமுகங்களிலிருந்து சரக்கை கையாளும் பணியில் 2 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.

அந்த நிறுவனங்கள் அரசிற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று மதுரையில் இயங்கி வரும் மத்திய சேவை வரி மற்றும் சரக்கு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் நடந்த விசாரணையில் 9.56 கோடி வரை ஜி.எஸ்.டி வரியை அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றும் கூட அரசிற்கு செலுத்தாமல் 2 நிறுவனங்களும் வரியை ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது.

மேலும் சுமார் 4.32 கோடி ரூபாயை உரிய ஆவணங்களின்றி உள்ளீட்டு வரியாக எடுத்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய சேவை வரி மற்றும் சரக்கு துறையின் ஆணையர் 2 நிறுவனத்தின் இயக்குனர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.