woman

உத்தரபிரதேசம் நொய்டாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஒரு ஜோடிக்கு கடந்த வருடம் கல்யாணம் ஆகி உள்ளது. புதுமணப்பெண் மாமியார் வீட்டில் வாழ்க்கையை தொடங்கினார். தம்பதியர் இருவரும் சந்தோஷமாகவே இருந்தனர். இந்நிலையில் ஒருநாள் வீட்டில் மாமனாரும், மருமகளும் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.

மகன் வீட்டிற்கு வர நேரமாகும் என்பதை அறிந்த மாமனார், மருமகளிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருமகள், இப்படி செய்தால் கணவனிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி உள்ளார். ஆனாலும் மாமனார் அதை காதிலேயே வாங்கவில்லை,. தொடர்ந்து கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து, வீட்டுக்கு கணவன் வந்ததும் நடந்தது அனைத்தையும் மனைவி கதறி அழுதபடியே சொல்லி உள்ளார். ஆனால், அதை கணவர் நம்பவே இல்லையாம். வீண் பழி போடுவதாக சொல்லி குடும்பத்துடன் அப்பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இது மாமனாருக்கு இன்னும் சாதகமாகிவிட்டது. அதனால், மறுபடியும் மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயலவும், வீட்டை விட்டு வெளியேறி, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் அப்பெண்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

தனது பெற்றோரை அழைத்து கொண்டு, அந்த பகுதியில் இருந்த ஸ்டேஷனுக்கு சென்று மாமனார் மீது புகார் தந்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் அந்த பெண், கணவனின் 2வது மனைவி என்பது தெரியவந்தது. இதற்கெல்லாம் காரணமாக மாமனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையும் நடந்து வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending