விவேக்கை விவேக் ஓபராய் என வெளியிட்ட வட மாநில ஊடகங்கள்! விவேக் ஓபராய் விளக்கம்!

Published:

vivek obrai
vivek obrai

பெயர் குழப்பத்தால் நடிகர் விவேக்கிற்கு பதில் விவேக் ஓபராய் என செய்தி வெளியானதாகச் சொல்லப்படும் நிலையில், அதற்கு தற்போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, ‘நான் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தவறான செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் நானும், எனது குடும்பமும் மும்பையில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், தமிழ் திரையுலக நடிகர் விவேக் மறைவு செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியது. எனது ஆழ்ந்த இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.’ இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vivek 1
vivek 1

முன்னதாக, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவேக் இறந்த பின்னர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதாக கூறப்படுகிறது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

மும்பையின் ஊடகங்களிலும் விவேக்கிற்கு பதிலாக விவேக் ஓபராய் பெயர் இடம் பெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img