
தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மேலும் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை உடனுக்குடன் தரவும் முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.