பிரபல மலையாள நடிகை காலமானார்!

Lalitha - 2026

பிரபல மலையாள திரைப்பட நடிகை கே.பி.ஏ. சி.லலிதா ( வயது 74 ) காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று உயிரிழந்தார்.

பிரபல மலையாள இயக்குனர் பரதனின் மனைவியான லலிதா மொத்தம் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆலப்புழாவில் உள்ள நாடக கூட்டான இடதுசாரி கேரள மக்கள் கலைக் கழகத்தில் (கேபிஏசி) தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லலிதா.1969ம் ஆண்டு கே.எஸ். சேது மாதவனின் கூட்டுக்குடும்பம் என்ற படத்தின் மூலம்தான் சினிமாவுக்குள் நுழைந்தார்.

காயங்குளத்தில் இருந்த கேபிஏசி என்ற ஒரு பிரபல நாடக சபாவில் இணைந்து தன்னையே அர்ப்பணித்து கொண்டார்.. அங்குதான் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார்.

அந்த நாடக கம்பெனி பெயராலேயே அவர் கேபிஏசி லலிதா என்று அழைக்கப்பட்டார்… நாடகத்தில் கொடிகட்டி பறந்ததையடுத்து, மலையாள சினிமா உலகம் இவரை இருகரம் கூப்பி அழைத்து கொண்டது. ஏராளமான கேரக்டர்களில் நடித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

இவரது குணச்சித்திர கேரக்டர்களுக்கு கேரளாவில் தனி ரசிகர் கூட்டமே உண்டு.மிகவும் கவனமாக கதையை தேர்ந்தெடுத்து, அதில் தன்னுடைய நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தினார் லலிதா.

கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் லலிதா பதவியில் இருப்பவர். இதுவரை தமிழ் மற்றும் மலையாளம் சேர்த்து கிட்டத்தட்ட 550-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இவரது கணவர்தான் பிரபல மலையாள டைரக்டர் பரதன். இவர்தான் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் டைரக்டர் ஆவார்.

தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், சுயேச்சை எம்எல்ஏ, கிரீடம், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். 1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளுக்கான சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும், 4 முறை கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார் லலிதா.

லலிதாவின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லலிதாவின் கணவர் பரதன் கடந்த 1998ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி என 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சித்தார்த் இயக்குனராகவும், நடிகராகவும் உள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இவரை மலையாள சினிமா துறையினர் மகேஸ்வரி அம்மா என்றுதான் பாசமாக கூப்பிடுவார்கள். இப்போதும் அப்படியே கண்ணீருடன் அழைத்து, இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories