
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க., பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆலங்குளம் அருகே பலபத்திரராமபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி 35. தி.மு.க., பிரமுகர்.
நேற்று காலை ஊரில் இருந்து காரில் சின்னக்கோவிலான்குளம் சென்றார். காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. மாவிலியூத்து அருகே தனியே நடந்துசென்ற 9ம் வகுப்பு மாணவியிடம் நைசாக பேச்சுகொடுத்து ஊரில் இறக்கிவிடுவதாக ஏற்றிச்சென்று பாலியல் தொந்தரவு செய்தார்.
சிறுமி சத்தம்போட்டு அழுததால் ரோட்டில் சென்றவர்கள் காரை மடக்கினர். முத்துச்சாமிக்கு தர்மஅடி கொடுத்து ஊத்துமலை போலீசில் ஒப்படைத்தனர். அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.