நெகட்டிவ் ரோலா..‌‌ அஜித் அடுத்த பட அப்டேட்!

அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா
ajith kumar
ajith kumar

தமிழ் சினிமா ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில் நாயகியாக நடித்த ஹீமா குரோஷி நடிக்கிறார்.

ஆனால், இப்படத்தில் ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் பிச்சர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேறமாரி’ என்ற பாடலை வெளியிட்டது படக்குழு. இப்பாடலும் சூப்பர் ஹிட்டாகி இணையத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் Glimpses வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவிற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி படத்தின் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் போனி கபூர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றுவது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

அந்தவகையில் இப்படத்தை முடித்துவிட்டு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அஜித் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். ஏற்கனவே மங்காத்தா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் அஜித் மீண்டும் நெகடிவ் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.