kamal loki.jpeg - 2026

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் ..

சினி நியூஸ்

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார் நடிகர் கமல் ஹாசன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் ஜூன் 3 அன்று வெளியானது. படம் வெளிவந்த நாள் முதல் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் திரையரங்குக் காட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் வசூலும் அதிகரித்து வருகிறது. முதல் மூன்று நாள்களில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கமல் ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்ததால் அதற்கு மதிப்பளிக்கும் விதமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குப் விலை உயர்ந்த ஆடம்பர‌ காரை பரிசளித்துள்ளார் கமல் ஹாசன். ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசு காரான லெக்ஸஸை லோகேஷ் கனகராஜுக்குப் பரிசாக வழங்கிக் கெளரவித்துள்ளார்.

ALSO READ:  தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!
kamal loki.jpeg - 2026
lokesh car kamal twi - 2026
Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam