மெசஞ்சர் ஆஃப் காட் – படத்துக்கு பலத்த எதிர்ப்பு

சினி நியூஸ்

MSG-The-Messenger-of-God மெசஞ்சர் ஆஃப் காட்’ படத்தை திரையிட பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹரியாணாவில் செயல்படும் “தேரா சச்சா சௌதா’ அமைப்பின் தலைவர் இயக்கி நடித்துள்ள இப்படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி, பல்வேறு சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதுகுறித்து பதிண்டா மண்டல காவல்துறை ஐ.ஜி. பரமராஜ் சிங் கூறியது: பஞ்சாபின் பதிண்டா மண்டலதுக்குள்பட்ட முக்த்ஸர், மான்ஸா, ஃபெரோஸ்பூர், ஃபரீத்கோட், மோகா ஆகிய மாவட்டங்களில் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அப்பகுதிகளில் அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்க 13 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஏராளமான துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர். பதிண்டா பகுதியிலிருந்து தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர், “மெசஞ்சர் ஆஃப் காட்’ திரைப்படத்தின் பிரத்யேகக் காட்சியைக் காண்பதற்காக ஹரியாணாவின் குர்கான் நகருக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.