விஜயுடன் நடிக்க ஆசை: கப்பல் நடிகை

கிசுகிசு

sonam-bajwa ‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், தனது முதல் படமான ‘கப்பல்’ வெற்றி அடைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறார். “நான் பஞ்சாபை சேர்ந்தவள் என்றாலும் என் நண்பர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான். இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர் தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்திருப்பது மிகவும் பெருமையான விஷயம். ‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விக்ரம், ரகுமான், ஷங்கர் என அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. அவர்களின் கனிவான வார்த்தைகளும், உற்சாகமும் என்னை ஊக்கப்படுத்தியது. ‘கப்பல்’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்திருக்கின்றன. அது தொடர்பாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் தற்போது மேலும் நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரையுலகின் நுணுக்கங்களை அந்தப் படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன்…” என்றார் சோனம் பாஜ்வா. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய்யின் தீவிர ரசிகை ஆகி விட்டாராம் சோனம் பாஜ்வா. எல்லோரையும் கவரும் காந்தம் அவர் என்று கூறியவர், விஜய்க்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை. அவருடன் ஜோடியாக ஒரு படத்த்ல் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன் என்றாராம். இந்த வருடமே அவரது ஆசை கை கூடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாராம் சோனப் பாஜ்வா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.