கொரோனா: ஒரு குடும்பத்தை உள்ளே வைத்துப் பூட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள்!

Published:

appointment
appointment

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்குள் வைத்து அக்கம்பக்கத்தினர் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இப்படி ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில்
ஏராளமானோர் ஒரு அப்பார்ட்மென்டில் குடியிருந்து வருகிறார்கள். அதில் ஒரு வீட்டில் இருந்த தம்பதி இருவரும், 10 நாளைக்கு முன்பு கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்.

அதில் இருவருக்குமே தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், தங்களை தாங்களே இருவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களின் மகன் கடந்த திங்கட்கிழமையன்று வெளியே சென்று, பெற்றோருக்கு தேவையான மருந்துகளை வாங்கி வந்துள்ளார். மகன் மருந்து வாங்கிவருவதை அக்கம்பக்கத்தினர் கண்டு. அவர் மருந்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றதுமே, 3 பேரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும், “ப்ளீஸ் கதவை திறந்துவிடுங்க. இப்படி பூட்டிவிட்டால், மருந்து, தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்” என்று பலமுறை கெஞ்சியுள்ளனர்.

ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

ஆனாலும் யாரும் கதவை திறந்துவிடவில்லை. இறுதியில், தம்பதி போலீசுக்கு போன் செய்து விஷயத்தை கூறியுடன்,. விரைந்து வந்த போலீசார், பூட்டை அகற்றி அவர்களை விடுவித்தனர்.

அத்துடன், அக்கம்பக்கத்தினர் அனைவரையும் அழைத்து அட்வைஸ் தந்தனர். அதுமட்டுமல்ல, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சட்டவிரோதமாக பூட்டியதற்காக எதிர்வீட்டு பிளாட் ஓனர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img